• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பேரீச்சம்பழம் சாப்பிட்டு.. தங்கத்தை தீயில் போட்டு, போனை டிடர்ஜென்டில் ஊற வைத்து! வங்கதேசத்தில் பகீர் | Bangladesh Unthinkable Mystery.. Ate Dates, Put Gold in Fire and Soaked Phone in Detergent.. What Happened?

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பேரீச்சம்பழம் சாப்பிட்டு.. தங்கத்தை தீயில் போட்டு, போனை டிடர்ஜென்டில் ஊற வைத்து! வங்கதேசத்தில் பகீர் | Bangladesh Unthinkable Mystery.. Ate Dates, Put Gold in Fire and Soaked Phone in Detergent.. What Happened?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Published: Tuesday, August 25, 2026, 8:43 [IST]

டாக்கா: வங்கதேச நாட்டின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாரா பகுதியில், ஒட்டுமொத்த குடும்பம், படு கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. இது கொடூரம் சர்வதேச அளவில் பெரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் 4 பேரையும் கொன்று குவித்துள்ளார்கள் 2 கிரிமினல்கள். இது சம்பந்தமான விசாரணை நடந்தபோதுதான், இன்னொரு அதிர்ச்சி தகவலும வெளியாகி உள்ளது…!!

தாஸ்பாரா பகுதியை சேர்ந்தவர் கணபதி சக்ரவர்த்தி.. இவர் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார்.. இவரது மனைவி பிரீதிலதா சக்ரவர்த்தி.. இவர்களுக்கு ஆகாமி சக்ரவர்த்தி பிரார்த்தி, பிரியம் சக்ரவர்த்தி என்ற பிள்ளைகள் இருக்கிறார்கள்.

Bangladesh Unthinkable Mystery Bangladesh Rangpur Incident Gold in Fire Detergent Phone Mystery Bangladesh Family Case

மொட்டை மாடியில் கும்மாளம்

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில், அதே பகுதியை சேர்ந்த, முக்தோ மற்றும் சித்தார்த்தா ஆகிய இருவரும் அருகிலுள்ள கட்டிடத்தின் வழியாக ஆசிரியரின் வீட்டு மொட்டை மாடிக்கு ஏறிச்சென்று அங்கு போதைப்பொருள் சாப்பிட்டுள்ளார்கள்.. அப்போது போதை தலைக்கேறி இருவரும் ஏதோ சத்தமிட்டு கும்மாளம் போட்டுள்ளனர்.

இந்த சத்தத்தை கேட்டு மொட்டை மாடிக்கு வந்துள்ளார் ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி.. அங்கே 2 இளைஞர்கள் போதைப்பொருளை சாப்பிடுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதேபோல ஆசிரியர் மாடிக்கு வந்ததை அந்த 2 பேரும் எதிர்பார்க்கவில்லை.. இதனால் விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், ஆசிரியர் தோளில் கிடந்த துண்டை எடுத்து, அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.

படிக்கட்டிலேயே மனைவி காலி

கணவரின் திணறல் சத்தம் கேட்டு, அலறியடித்து கொண்டு அவரது மனைவி மொட்டை மாடிக்கு ஓடிவந்தார்.. ஆனால், மனைவியை படிக்கட்டில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்கள்.. அவரது சத்தத்தை கேட்டு, மாடிக்கு 2 பிள்ளைகளையும் கண்மூடித்தனமாக தாக்கி கொன்றார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் 4 சடலங்கள் அந்த மொட்டை மாடியில் விழுந்தன.

மறுநாள் வெள்ளிக்கிழமை இரவுதான், போலீசார் அந்த 4 சடலங்களையும் மீட்டனர்.. இவர்களை கொன்றது யார்? என்ற விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போதுதான் பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்தினருடன் யாருக்கும் எந்தவிதமான முன்விரோதமும் அல்லது பகையும் கிடையாது என்பது போலீசாருக்கு உறுதியானது.

அப்படியானால் வெளிநபர்கள்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கப்பட்டது. இறுதியில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானதை கண்டு போலீசாதே திகைத்துவிட்டார்கள்.

வீட்டிற்குள் பேரீச்சம்பழம் சாப்பிட்டு..

அதாவது 4 பேரையும் கொடூரமாக கொலை செய்த பிறகு, குற்றவாளிகள் அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடவில்லை.. மாறாக, 2 பேரும் மொட்டை மாடியிலிருந்து கீழேயுள்ள வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.. 2 பேருமே அங்கிருந்த பாத்ரூமில் குளித்துள்ளனர்.. நைட் நேரத்தில் சாப்பாடு எதுவும் இல்லை என்பதால், டைனிங் டேபிளில் இருநத வெள்ளரிக்காய் மற்றும் பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுள்ளனர்.. அத்துடன் தாங்கள் கொண்டு வந்திருந்த போதைப்பொருளையும் அங்கேயே சாப்பிட்டனர்.

பிறகு, வீட்டில் கொள்ளைக்காக கொலைகள் நடந்தது போல் போலீசுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, வீட்டின் பொருட்களை தாறுமாறாகக் கலைத்து போட்டார்கள்.. வீட்டில் பீரோடிவில் இருந்த தங்கத்தை எடுத்தனர்.. ஆனால், அது உண்மையான தங்கமா? கவரிங்கா என்பதை சோதிப்பதற்காக, ஒரு தங்க வளையத்தை எடுத்து நெருப்பில் எரித்து பார்த்திருக்கிறார்கள்.

கடைசியில் ட்விஸ்ட்

அதேசமயம், தாங்கள் தொட்ட இடங்களில் எல்லாம் கைரேகை தடங்கள் எதுவும் சிக்கக்கூடாது என்பதற்காக, வீட்டில் இருந்த 2 செல்போன்களை டிடர்ஜென்ட் பவுடர் கலந்த தண்ணீரில் ஊற வைத்தார்கள்..

பிறகு மறுநாள் வெள்ளிக்கிழமை என்பதால், அன்று மதியம் தொழுகை நேரத்தில் சாலை வெறிச்சோடி கிடந்தது.. அதுதான் சமயம் என்று முடிவுசெய்து, 2 பேரும் வீட்டை வெளியேறி தப்பிச் சென்றுவிட்டார்கள். இவர்களை தீவிரமாக வலைவீசிய போலீசார், முக்தோ மற்றும் சித்தார்த்தா என்ற 2 பேரை கைது செய்தனர்..

இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், இத்தனை கொலைகளை செய்து, அட்டகாசம் செய்தது, உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்களாம்…!!இரண்டு உறவினர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்…!!!

English summary

Bangladesh Unthinkable Mystery.. Ate Dates, Put Gold in Fire and Soaked Phone in Detergent.. What Happened?

Read More

Previous Post

மகிந்த விஜேராம இல்லத்திலிருந்து புறப்பட்டபோது கூறியதும் நாமல் இன்று கூறுவதும்

Next Post

அமெரிக்காவின் அதிரடி முடிவு: பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்! – Sri Lanka Tamil News

Next Post
அமெரிக்காவின் அதிரடி முடிவு: பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்! – Sri Lanka Tamil News

அமெரிக்காவின் அதிரடி முடிவு: பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin