விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின் பேரில் நேற்று (24.08.2026) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறித்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், சில புதிய ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மெத்தம்பெட்டமைன்
குறிப்பாக, சட்டத்தின் 54ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஹெரோயின், கொக்கேய்ன், மோர்ஃபின் மற்றும் அபின் ஆகியவற்றுடன் மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) என்ற போதைப்பொருளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், அரச பகுப்பாய்வாளரால் வழங்கப்படும் அறிக்கைகள், போதைப்பொருள் குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் மற்றும் போதைப்பொருள் சந்தேகநபர்களைக் கைது செய்யும்போது புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் புதிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்வதிலும், சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் புதிய சட்ட ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

