• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!! முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு..!! | Tamil Nadu CM Vijay Announces 3 Free LPG Cylinders Per Year: Eligibility, Income Limit and Pongal 2027 Rollout

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!! முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு..!! | Tamil Nadu CM Vijay Announces 3 Free LPG Cylinders Per Year: Eligibility, Income Limit and Pongal 2027 Rollout
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!! முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

முதலமைச்சர் விஜய் குடும்ப தலைவிகள் மிகவும் எதிர்பார்த்த இலவச சிலிண்டர்கள் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில், வெளியிட்டார். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது.

காலையில் அவை கூடிய உடன் முதலமைச்சர் விஜய் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இலவச சிலிண்டர் திட்டம் குறித்தும் அது எப்போது முதல் அமல்படுத்தப்படும் என்பது குறித்தும் அவர் அறிவித்தார். தற்போது வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் வாங்க மாதம் தோறும் ஒவ்வொரு குடும்பமும் தலா 1000 ரூபாயை செலவிட வேண்டி இருக்கிறது. ஈரான் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு சிலிண்டர் விலையும் உயர்ந்தது.

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!! முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது விஜய்-இன் தவெக சார்பாக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் தரப்பட்டன. குறிப்பாக அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இலவசமாக 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. விஜய் தலைமையிலான அரசு அமைந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்ற புகார் இருந்தது.

இந்நிலையில் தான் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தார்.

எனவே வரும் 2027ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக கிடைக்க போகின்றன. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் இந்த இலவச சிலிண்டர் கிடைக்காது. இதற்கான சில தகுதிகளை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி ஓராண்டுக்கு 2 லட்சத்திற்குள் வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் 3 இலவச சிலிண்டர்கள் கிடைக்கும்.

அதாவது உங்கள் குடும்ப வருமானம் ஓராண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால் மட்டுமே நீங்கள் 3 இலவச சிலிண்டர்களை பெற முடியும். இந்த திட்டத்தில் நாம் சிலிண்டர் எடுத்த பிறகு அந்த சிலிண்டருக்கான தொகையை அரசே சம்பந்தப்பட்ட குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் 1.3 கோடி குடும்பங்கள் பலனடைய உள்ளன. அரசுக்கு இதனால் 4000 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும். சிறு, குறு வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் சேர பொதுமக்கள் விண்ணப்பம் எதுவும் செய்ய தேவை இருக்காது. ஏனெனில் அரசே நேரடியாக சிலிண்டர் நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை பெற்று பயனாளிகளை தேர்வு செய்யும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்களிடம் நம்முடைய ஆதார் உள்பட அனைத்து தகவல்களும் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க சிலிண்டர் எடுத்த பிறகு தான் பணம் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. உண்மையான பயனாளிகளை இந்த திட்டம் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அரசு இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Share This Article

English summary

Tamil Nadu CM Vijay Announces 3 Free LPG Cylinders Per Year: Eligibility, Income Limit and Pongal 2027 Rollout

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..! யாருக்கு கிடைக்கும்? தகுதிகள் என்ன? /Tamil Nadu Chief Minister Vijay has announced that eligible families will receive three free LPG cylinders annually under the first phase of the Annapoorani Super 6 scheme from Pongal 2027.

Story first published: Monday, August 24, 2026, 10:12 [IST]

Read More

Previous Post

ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்

Next Post

RM50-க்கு பாலியல் சேவை வழங்கிய வெளிநாட்டுப் பெண்கள்: 7 மலேசியர்கள் உட்பட 57 பேர் கைது!

Next Post
RM50-க்கு பாலியல் சேவை வழங்கிய வெளிநாட்டுப் பெண்கள்: 7 மலேசியர்கள் உட்பட 57 பேர் கைது!

RM50-க்கு பாலியல் சேவை வழங்கிய வெளிநாட்டுப் பெண்கள்: 7 மலேசியர்கள் உட்பட 57 பேர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin