• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.1.64 லட்சத்தைத் தொட்ட தங்கம் விலை! பணவீக்கத்தை சமாளிக்குமா? உண்மை இதுதான்! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! | Gold Is Rallying Again! Can It Really Beat Inflation?

GenevaTimes by GenevaTimes
August 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.1.64 லட்சத்தைத் தொட்ட தங்கம் விலை! பணவீக்கத்தை சமாளிக்குமா? உண்மை இதுதான்! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! | Gold Is Rallying Again! Can It Really Beat Inflation?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.1.64 லட்சத்தைத் தொட்ட தங்கம் விலை! பணவீக்கத்தை சமாளிக்குமா? உண்மை இதுதான்! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

தங்கத்தின் விலை மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1.59 லட்சமாக இருந்தது. ஆனால் இப்போது ரூ.1.64 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தியர்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்குவதற்கு முக்கிய காரணம் அதன் லிக்விடிட்டி. அதாவது எப்போது வேண்டுமானாலும் தங்கத்தை பணமாக்கலாம். மேலும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த பாதுகாப்பாக மக்கள் தங்கத்தை கருதினர். அதற்கு ஏற்றவாறு இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ.15,030-ஐ எட்டியுள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.88 அதிகரித்து 16,397-ஐ எட்டியுள்ளது. 1 பவுன் 22 கேரட் தங்கம் ரூ.640 அதிகரித்து ரூ.1,20,240-க்கும், 1 பவுன் 24 கேரட் தங்கம் ரூ.74 அதிகரித்து ரூ.1,31,176-க்கும் விற்பனையாகிறது.

ரூ.1.64 லட்சத்தைத் தொட்ட தங்கம் விலை! பணவீக்கத்தை சமாளிக்குமா? உண்மை இதுதான்! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

ஃபண்ட்ஸ் இந்தியா என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 1995-ஆம் ஆண்டு தொடங்கி 2025-ஆம் ஆண்டு வரையில் தங்கத்தின் வருமானத்தையும் பணவீக்கத்தையும் ஒப்பிட்டு அறிக்கையாக வெளியிட்டது. அதில் பணவீக்கத்திற்கு எதிராக தங்கம் நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானத்தை வழங்கியுள்ளது தெரிய வந்தது.

விலை ஏற்றத்தை தான் பணவீக்கம் என்கிறோம். ஒரு பொருளின் விலை ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் வரை உயர்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நீங்கள் முதலீடு செய்திருக்கும் அரசாங்கத் திட்டமோ அல்லது தங்கமோ 6 சதவீதத்திற்கு அதிகமாக லாபம் தந்தால் மட்டுமே அது பணவீக்கத்திற்கு எதிராக வருமானத்தை வழங்கி உள்ளது என்று அர்த்தம்.

1 வருடத்தில் தங்கம் கொடுத்த ரிட்டர்ன்ஸ்: ஃபண்ட்ஸ் இந்தியா நடத்திய ஆய்வில் 1 வருட காலக்கட்டத்தில் தங்கத்தை முதலீடாக வாங்கி வைத்தவர்களுக்கு சராசரியாக பணவீக்கத்தை தாண்டி 4 சதவீத வருமானம் கிடைத்திருக்கிறது. சில ஆண்டுகளில் பணவீக்கத்தை தாண்டி 24 சதவீதம் வரை வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால் ஒரு சில ஆண்டுகளில் பணவிக்கத்திற்கு எதிராக தங்கம் சரிவையும் சந்தித்திருக்கிறது.

5 வருடங்களில் தங்கம் கொடுத்த ரிட்டன்ஸ்: முதலீட்டு காலம் அதிகரிக்க அதிகரிக்க தங்கம் சீரான வருமானத்தை முதலீட்டாளர்கள் வழங்கியுள்ளது. குறிப்பாக 5, 10, 15 மற்றும் 20 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில் தங்கம் பணவீக்கத்தை தாண்டி 4 சதவீதம் வரை வருமானம் கொடுத்துள்ளது.

இதை ஒரு எளிய உதாரனத்தோடு பார்ப்போம். இதிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2020-ஆம் ஆண்டு தங்கம் விற்பனையான விலையையும் தற்போது தங்கம் விற்பனையாகும் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விடை உங்களுக்கே கிடைத்துவிடும். 2020-ஆம் ஆண்டில் 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.39,000 முதல் ரூ.40,000 வரை விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.50,000 என்ற விலையில் விற்பனையானது. ஆனால் இப்போது சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 லட்சத்தையும் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது குறுகிய கால அடிப்படையில் பணவீக்கத்திற்கு எதிராக தங்கம் செயல்படவில்லை என்றாலும்.. நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.

Share This Article

Story first published: Monday, August 24, 2026, 17:44 [IST]

Other articles published on Aug 24, 2026

Read More

Previous Post

ஒரே இரவில் நடக்கும் ‘திக். திக்.. திக்​…’

Next Post

மலேசியாவில் புகைமூட்டம் தீவிரம்: 21 பகுதிகளில் காற்றுத் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலைக்கு வீழ்ச்சி!

Next Post
மலேசியாவில் புகைமூட்டம் தீவிரம்: 21 பகுதிகளில் காற்றுத் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலைக்கு வீழ்ச்சி!

மலேசியாவில் புகைமூட்டம் தீவிரம்: 21 பகுதிகளில் காற்றுத் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலைக்கு வீழ்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin