தற்போது நிலவும் எல் நினோ வானிலை காரணமாக நீர் வளங்கள் வறண்டு வருவதால், மின்சாரத் தேவை அதிகரித்து, உற்பத்தித் திறனும் குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) எச்சரித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலைகளில், நாடு மின்சாரப் பற்றாக்குறை அபாயத்தை எதிர்கொள்ளும் என்று PUCSL தலைவர் கே.பி.எல். சந்திரலால் கூறயுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்காக புதிதாக அறிவிக்கப்பட்ட மின் கொள்முதல் கட்டணங்கள் குறித்த இன்றைய ஊடக சந்திப்பின்போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மின் விநியோக உறுதி
தற்போது நிலவும் சூழ்நிலைகளின் விளைவாக, மின்கல சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவாட் மின் நுகர்வுக் குறைவு ஏற்படக்கூடும் என்றும், இது தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதை மேலும் கடினமாக்கும் என்றும் சந்திரலால் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையையும் நம்பகமான மின்சார விநியோகத்தையும் உறுதி செய்வதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதன் மூலமும், போதுமான சேமிப்புத் திறனைப் பராமரிப்பதன் மூலமும் இந்த சவால்களுக்குத் தயாராக வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

