Last Updated:
பெற்றோர் எந்தவொரு இருமல் அல்லது சளி மருந்தையும் வாங்குவதற்கு முன்பாக, அதன் “Active ingredients” பகுதியைப் படித்துப் பார்க்க வேண்டும்.
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘குளோர்ஃபெனிரமைன் மாலேட்’ (Chlorpheniramine maleate) மற்றும் ‘ஃபீனைல்எஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு’ (Phenylephrine hydrochloride) ஆகிய இரு மருந்துகள் இணைந்த கூட்டுப் பயன்பாட்டு (Fixed-Dose Combination – FDC) இருமல் மற்றும் சளி மருந்துகளை வழங்க மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. 1940-ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ், பொதுமக்களின் சுகாதார நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


