Last Updated:
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் இந்த ஜப்பான் பயணம், இருதரப்பு வர்த்தகம், முதலீட்டு உறவுகளுக்குப் புதிய உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. .
மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இன்று முதல் ஆக. 27ம் வரை ஜப்பானின் டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். உற்பத்தி, செமிகண்டக்டர், தூய்மையான எரிசக்தி, எஃகு, வாகனத் துறை, நிதிச் சேவைகள், சுகாதாரப் புத்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான வணிகப் பிரதிநிதிகளைக் கொண்ட, மிகப்பெரிய வணிகக் குழு அவருடன் ஜப்பான் செல்கிறது.


