• Login
Monday, August 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பேருந்தில் தொலைந்த தங்கச் சங்கிலி…! சாரதி – நடத்துநரின் நேர்மையான செயல்

GenevaTimes by GenevaTimes
August 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பேருந்தில் தொலைந்த தங்கச் சங்கிலி…! சாரதி – நடத்துநரின் நேர்மையான செயல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்
சங்கிலி, மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (23-08-2026) இடம்பெற்றுள்ளது.  

பேருந்தின் நடத்துநரும் மற்றும் சாரதியுமே இவ்வாறு நகையை அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.

மரணச் சடங்கு

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை
செல்லும் 767 வழித்தட (4241 இலக்க) இ.போ.ச பேருந்தின் மதிய சேவையின் போது பயணித்த
பெண் ஒருவர் வட்டுக்கோட்டையில் மரணச் சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு இன்னொரு உறவினர்
வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற பின்னரே அவரது கழுத்தில் இருந்த
இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி இல்லாததை அவர் உணர்ந்துள்ளார்.

பேருந்தில் தொலைந்த தங்கச் சங்கிலி...! சாரதி - நடத்துநரின் நேர்மையான செயல் | Sltb Staff Return Lost Gold Chain Worth Rs 1M

இதையடுத்து அவர் வழிநெடுகிலும் சென்று பார்த்தபோதும் சங்கிலியைக்
கண்டுபிடிக்கமுடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பின்பு, இனிச் சங்கிலி கிடைக்காது என்ற கவலையோடு மீண்டும்
வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்தித்துறை நோக்கிச் செல்ல அதே அதே பேருந்தில் ஏறியுள்ளார்.

தங்கச்சங்கிலி 

அப்போது அவர் தனது தங்கச்சங்கிலி காணாமல் போன விடயத்தை பேருந்தின் நடத்துநருக்கும் மற்றும் சாரதிக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இதன்போது அவர்கள், நீங்கள்
அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது எனவும் அதைக் கண்டெடுத்து பத்திரமா
வைத்திருக்கிறோம் எனவும் கூறி அதனை ஒப்படைத்துள்ளனர்.

பேருந்தில் தொலைந்த தங்கச் சங்கிலி...! சாரதி - நடத்துநரின் நேர்மையான செயல் | Sltb Staff Return Lost Gold Chain Worth Rs 1M

பின்னர் பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் பேருந்தை சுத்தம் செய்தபோது,
அந்தச் சங்கிலியின் எஸ்வடிவிலான இணைப்புப் பகுதியையும் கண்டெடுத்து அதனையும்
உரிய பெண்ணிடம் சேர்ப்பித்துள்ளனர்.


இவ்வாறு 10 லட்சம் ரூபா பெறுமதியான நகையினைக் கண்டெடுத்து
உரியவர்களிடம் சேர்ப்பித்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதியான மனோகரன்
சயந்தன் மற்றும் நடந்துநரான இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் நேர்மைப்பண்பை பேருந்தில இருந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

எனக்கு PKR-ல் சேரும் எண்ணம் இல்லை என்கிறார் ஜுரைடா | Makkal Osai

Next Post

பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்… செமிகண்டக்டர் துறையில் முதலீட்டை ஈர்க்க திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்… செமிகண்டக்டர் துறையில் முதலீட்டை ஈர்க்க திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்... செமிகண்டக்டர் துறையில் முதலீட்டை ஈர்க்க திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin