கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டல திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
- செல்லுபடியாகும் காலம்: 2026 ஓகஸ்ட் 24ஆம் திகதி முற்பகல் 10.30 மணியிலிருந்து 2026 ஓகஸ்ட் 25ஆம் திகதி முற்பகல் 10.30 மணி வரை
. - பாதிக்கப்படும் பகுதிகள்: காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் இப்பிரிவில் அடங்கும்
. - காற்றின் வேகம்: மேற்கூறிய கடற்பரப்புகளில் அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்
. - அலைகளின் உயரம்: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
.


