ஈரானின் நூதன தாக்குதல்.. முதல்ல பிரிட்டன், அடுத்து அமெரிக்காவா..? ஜூலை மாதம் நடந்த விஷயம் வெளியானது!
ஈரானின் தாக்குதல் மறு வடிவம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அமெரிக்கா உடனான போரில் பட்ஜெட் விலையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் மூலம் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளைும் ஓடவிட்ட நிலையில்.. அடுத்தக்கட்டமாக இணையம் வழியாக தாக்குதலை ஈரான் மறைமுகமாக மேற்கொண்டு வருகிறதா என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது.
ஈரான் உடன் தொடர்புடைய ஹேக்கர்கள் குழு பிரிட்டன் நாட்டில் இருக்கும் ஒரு பவர் பிளான்ட்-ஐ அதாவது மின்சார உற்பத்தி தளத்தை ஹேக் செய்து 4 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டு இருந்தாக இன்று டெலிகிராப் தனது செய்தியில் தெரிவித்து அதிரடி கிளப்பியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக ஈரான் உடன் தொடர்புடைய ஹேக்கர்கள் குழு வெற்றிகரமாக பிரிட்டன் நாட்டின் மின்சார நிலையத்தின் மீது சைபர் அட்டாக் செய்து முடக்கியுள்ளது. இதுக்குறித்து பிரிட்டன் அதிகாரிகள் கூறுகையில், சைபர் அட்டாக் நடந்த மின் நிலையம் அளவில் மிகவும் சிறியது என்பதால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை, இந்த தாக்குதலால் மின் பகிர்மானத்திலோ, உற்பத்தியிலோ எவ்விதமான பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
ஜூலை மாதம் நடத்த தாக்குதல் குறித்து இப்போது தகவல் வெளியாகியிருந்தாலும், முழுமையாக தகவல்களை பிரிட்டன் அரசின் National Cyber Security Centre (NCSC) வெளியிடவில்லை. இந்த சைபர் அட்டாக் எங்கிருந்து நடந்தது, எந்த வெப்சைட் பாதிக்கப்பட்டது, பாதிப்பு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்பது குறித்த விபரங்களை வெளியிடவில்லை. ஈரான் தரப்பில் தனது தாக்குதல்களை தரை தளத்தில் இருந்து இணைய தளத்திற்கு விரிவாக்கம் செய்துள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து ஈரான் தொடர்புடைய அமெரிக்காவில் எதிரொலிக்குமான என்ற கேள்வி எழும் முன்பே தாக்குதல்கள் அமெரிக்காவில் துவங்கியுள்ளது.
இதே ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் குடிநீர் கட்டுப்பாட்டு அமைப்பில் சைபர் அட்டாக் நடந்துள்ளதாக FBI உட்பட பல அமெரிக்க அமைப்புகள் தெரிவித்துள்ளது. சுமார் 12 மாநிலத்தில் தண்ணீர் கட்டமைப்புகள் மீது சைபர் அட்டாக் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதை ஈரான் தொடர்புடைய ஹேக்கர்கள் குழு செய்ததா என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.
ஈரானின் பிரிட்டன் மின் நிலையத்தின் மீதான இந்த சைபர் அட்டாக் பிரிட்டன் படைகள் ஈரானுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு ஆதரவமாகவும் தனது ராணுவ தளத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட பின்பு நடந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.
