Last Updated:
இந்தியத் திரைப்படத்துறையின் பன்முகத்தன்மை, வலிமையை வெளிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் டாக்டர் எல் முருகன் சுட்டிக்காட்டினார்.
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம், நேற்று புதுதில்லியில் உள்ள கடமை மாளிகை-2-ல் நடைபெற்றது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்தத் திரைப்பட விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவாக, வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.


