கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில், உழவு இயந்திர விபத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21.08.2026) இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) உயிரிழந்த குழந்தையும் அவரது சகோதரரும் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார்.
3 வயது குழந்தை பலி
இதன்போது, உழவு இயந்திரத்தில் இருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து, டிராக்டரின் பின்புற சக்கரத்தின் கீழ் சிக்கியதில் படுகாயமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை உடனடியாக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழுமையான சூழ்நிலைகள் குறித்து கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

