• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுரேஷ் சலேவை தீவிரவாதியாக்கும் அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர்

GenevaTimes by GenevaTimes
August 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுரேஷ் சலேவை தீவிரவாதியாக்கும் அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சுரேஷ் சலே போன்ற போர் வீரர்களை அரசாங்கம் தீவிரவாதிகளாகக் காட்ட முயற்சிப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து நடத்தப்பட்ட கூட்டமொன்றின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சில முக்கிய வரலாற்று உண்மைகளை நினைவூட்ட விரும்புகிறேன். 1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியில் 4,000 முதல் 5,000 பேர் வரையிலும், 1987-89 காலப்பகுதியில் 40,000 முதல் 80,000 பேர் வரையிலும் கொல்லப்பட்டனர்.

சஹ்ரான் குழுவுக்கும் ஜனநாயக உரிமை?


அன்று தவறான பாதையில் சென்று கொலைகளைச் செய்தவர்கள் பின்னர் ஜனநாயகத்துக்கு வந்து மனித உரிமைகளைப் பற்றிப் பேச முடிந்தது என்றால், ஏன் அந்த உரிமையைச் சஹ்ரான் குழுவுக்கும், சிறையிலிருக்கும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கும், நாட்டைக் காப்பாற்றப் போராடிவிட்டு இன்று சிறையிலிருக்கும் போர் வீரர்களுக்கும் வழங்க முடியாது?

சுரேஷ் சலேவை தீவிரவாதியாக்கும் அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர் | Gnanasara Thero Concerned About Suresh Salley


1983 முதல் 2009 வரை வடக்கில் நிலவிய பயங்கரவாதத்தினால் 27,000 போர் வீரர்களை நாம் இழந்தோம்.


தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க எமது பாதுகாப்புப் படைகள் செயல்பட்டபோது, அவர்களுக்குத் தேவையான புலனாய்வு ஆதரவை அதிகளவில் வழங்கியவர்கள் முஸ்லிம் சகோதரர்களே.



ஆனால், 1990களில் உருவான ஆயுதக் குழுக்கள் அல் கொய்தா, போகோ ஹராம், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளின் செல்வாக்கினால் வஹாபி தீவிரவாதத்துக்கு இரையானார்கள்.


சுரேஷ் சலே போன்ற புலனாய்வு அதிகாரிகள் இந்த வஹாபி தீவிரவாதத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றப் பாடுபட்டவர்கள்.


அத்தகைய போர் வீரர்களைத் தீவிரவாதிகளாகக் காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால், ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சிறையில் அடைத்தாலும் நாம் எமது தேசியப் பொறுப்பையும், சாசனப் பொறுப்பையும் கைவிடப் போவதில்லை.” என்றார்.

[IIXB9PG

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

டாக்ஸிக் திரைப்படத்திற்காக நயன்தாரா மொட்டை அடித்துக்கொண்டாரா? உண்மை என்ன? | Makkal Osai

Next Post

தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்.. நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் | TN Chief Secretary’s ideology exposed by targeting Left-wing student movements : CPI(M)

Next Post
தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்.. நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் | TN Chief Secretary’s ideology exposed by targeting Left-wing student movements : CPI(M)

தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்.. நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் | TN Chief Secretary's ideology exposed by targeting Left-wing student movements : CPI(M)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin