தங்கம் விலை: ஆகஸ்ட் மாதத்திலேயே இல்லாத உச்சம்.. தொடர்ந்து 5ஆவது நாளாக விலை உயர்வு..!!
தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை ஆகஸ்ட் மாதத்திலேயே இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதுவும் ஒரே நாளில் 1600 ரூபாய்க்கு மேல் விலை கூடியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,16,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக விலை உயர்ந்து சாமானிய மக்களை கலங்கடிக்க வைத்துள்ளது. இந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 400 ரூபாய் விலை கூடியுள்ளது. ஒரு சவரனுக்கு 3,200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஒரு கிராம் தங்கம் 14,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திலேயே இன்றைய தினம் தான் தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 218 ரூபாய் விலை உயர்ந்து 15,927 ரூபாய்க்கும் 10 கிராம் 1,59,270 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 200 ரூபாய் விலை உயர்ந்து 12,380 ரூபாய்க்கும் ஒரு சவரன் 16000 ரூபாய் விலை உயர்ந்து 99,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையும் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்து 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ 10000 ரூபாய் விலை கூடி 2.60 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் படிப்படியாக விலை உயர்ந்து கிராம் 260 ரூபாய் வரை வந்துவிட்டது. இந்த மாதத்திலேயே இன்று தான் வெள்ளி விலை அதிகபட்ச விலைக்கு விற்கப்படுகிறது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,496 டாலருக்கு வர்த்தகமாகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,58,480 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையிலும், எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை விற்பனையிலும் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் நீண்ட காலமாக சந்தையில் இருக்கும் பத்திரங்களை திரும்ப வாங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பணத்தின் பக்கம் திருப்பிவிட்டுள்ளனர். எனவே தான் ஒரே நாளில் தங்கம் விலை வேகமெடுத்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

