Last Updated:
தில்லியில் மணிப்பூர் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை. தில்லி காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ்.
டெல்லி முனிர்கா பகுதியில் மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு பேரை இரண்டு நபர்கள் தாக்கியது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து அது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது. தாக்கப்பட்டவர்களில் ஒருவர் தலையில் பலத்தக் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


