• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாகிஸ்தான் ஆன்லைன் மோசடி கும்பலுடன் தொடர்புடைய மலேசியர்கள் கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தான் ஆன்லைன் மோசடி கும்பலுடன் தொடர்புடைய மலேசியர்கள் கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் ஆன்லைன் மோசடிச் சிண்டிகேட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சில மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்த மலேசியக் காவல் துறை சார்பில் ஒரு சிறப்புப் படை அங்கு அனுப்பப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தின் குல்பர்க் கிரீன் பகுதியில் உள்ள மோசடி கால் சென்டர் மீது பாக்கிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது மலேசியர்கள் உட்பட 258 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பாக்கிஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல் துறைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த பலரும் இதில் அடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மலேசியாவையும் வெளிநாடுகளையும் இணைக்கும் இந்த மோசடி வலைப்பின்னலைக் கண்டறியும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சைபர்ஜெயாவில் உள்ள தேசிய மோசடி பதிலளிப்பு மையம் (NSRC) நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெற்று வருவதாகவும், நாட்டின் பல பகுதிகளில் வெளிநாட்டினர் முகாமிட்டு ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுத்திடக் காவல் துறையினர் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



Read More

Previous Post

வேலையை ஆரம்பித்த டிரம்ப்.. ஹார்முஸ் நீரிணை இனி அமெரிக்காவுக்கு சொந்தமானது.. வெளியான போட்டோ! | Trump Claims Strait of Hormuz is New US territory in Viral Truth Social Post as Brent Crude Tops $91.50

Next Post

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து சபாநாயரின் அறிவிப்பு!

Next Post
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து சபாநாயரின் அறிவிப்பு!

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து சபாநாயரின் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin