சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு பெரும் துயரங்கள் நிகழ்ந்தன. 1964-ல் பண்டித ஜவஹர்லால் நேருவின் மரணம், அதன்பின் 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் எதிர்பாராத மறைவு. நாடே நிலைகுலைந்து நின்ற அந்த இரண்டு தருணங்களிலும், நாட்டை வழிநடத்தும் பொறுப்பு குல்சாரி லால் நந்தாவைத் தேடி வந்தது. இரண்டு முறையும் தலா 13 நாட்கள் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்று, எந்தச் சலசலப்பும் இன்றி நாட்டைத் திறம்பட வழிநடத்தினார். அதன்படி, இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் தற்காலிக பிரதமராக பதவி வகித்த ஒரே நபர் இவராவார். பொறுப்பு முடிந்ததும் எந்த சலனமுமின்றி இயல்பாகத் தனது பணிக்குத் திரும்பினார்.

