தென் மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்பு
தற்போது, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. என்றாலும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், கேரளம் முதல்-மந்திரி வி.டி.சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு
இந்த மாநாட்டில், தென் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு, எல்லை பிரச்சினைகள், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் வரும் 20-ந் தேதி (நாளை மறுநாள்) மாலை சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பின்போது, காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து பேசப்பட இருக்கிறது.
ஏற்கனவே, கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் தமிழ்நாடு, கர்நாடக முதல்-அமைச்சர்கள் சந்தித்து பேச இருந்தனர். ஆனால், அங்கு போராட்டம் வெடித்ததால், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், “விஜய் இப்போது பெங்களூரு வரவேண்டாம். சந்திப்பை இன்னொரு நாள் வைத்துக்கொள்வோம்” என்று கூறிவிட்டார்.
முக்கிய முடிவுகள் எட்டப்படும்
இந்த நிலையில்தான், வரும் 20-ந் தேதி (நாளை மறுநாள்) தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் – கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பில், முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று தெரிகிறது.
