எங்க கம்பெனில.. 86% கோடிங் பணியை ஏஐ தான் செய்கிறது.. ஷாக் கொடுத்த CTO!
ஏஐ தான் எதிர்காலம் என்ற நிலை உருவாகியிருக்கும் வேளையில், ஒவ்வொரு நிறுவனம் எந்தளவுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறதோ அந்த அளவுக்கு வேகமாக வளர்ச்சி அடைய முடியும் என தீவிரமாக நம்ப துவங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக உலகளவில் டாப் 1 சதவீத நிறுவனங்கள் தலா ஒரு ஊழியருக்கு 7 லட்சம் ரூபாய் அளவில் செலவு செய்வதாக சமீபத்தில் ரிப்போர்ட் வெளியாகி பெரும் அதிர்ச்சி கொடுத்தது. இதை உறுதி செய்யும் வகையில் இந்தியாவில் முன்னணி நிதி சேவை நிறுவனமாக விளங்கும் பைசாபஜார் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான முகேஷ் ஷர்மா முக்கியமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முகேஷ் அளித்த பேட்டியில் எங்களுடைய நிறுவனத்தில் சாப்ட்வேர் கோடிங்-ஐ சுமார் 86 சதவீதம் ஏஐ தான் எழுதுகிறது என தெரிவித்துள்ளார். இதனால் எங்களுடைய நிறுவனத்தின் டெக் ஊழியர்களுக்கு வேலையில் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார் முகேஷ் சர்மா.
மேலும் அவர் கூறுறையில் 86 சதவீத கோடிங் பணியை ஏஐ மூலம் நாங்கள் செய்கிறோம் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். மேலும் எங்களுடைய இன்ஜினியரிங் டீமில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் கிளாட் அல்லது கர்சர்-ன் என்டர்பிரைஸ் வெர்ஷனை வைத்துள்ளனர்.
இதன் முலம் நிறுவனத்தில் செயல்திறன் பெரிய அளவில் மேம்பட்டு சாப்ட்வேர் கோடிங் முதல் ப்ரொடெக்ஷன் வரையிலான காலம் அதிகளவில் குறைந்துள்ளது.
பைசாபஜார் நிறுவனத்தில் கோடிங் எழுத மட்டுமில்லை, கோடிங்-ஐ ஆய்வு செய்யவும், QA மற்றும் டெஸ்ட் கேஸ் உருவாக்கவும் என பல கட்டத்தில் நாங்கள் ஏஐ பயன்படுத்தி வருகிறோம் என முகேஷ் தெரிவித்துள்ளார். ஏஐ மூலம் அதிகளவிலான ஊழியர்களின் தேவை என்ற நிலை குறைந்துள்ளது, குறைந்த எண்ணிக்கை கொண்ட ஊழியர்கள் வைத்துக்கொண்டு பெரிய திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் பெரிய அளவில் இருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் 50:50, 70:30 அளவில் தான் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பைசாபஜார் இந்த எச்சரிக்கை பிம்பத்தை உடைத்து 86 சதவீதம் வரையிலான கோடிங்-ஐ ஏஐ மூலம் உருவாக்குவதாக அறிவித்துள்ளது, டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

