டாடா நிறுவனத்திலா இப்படி.. வரலாற்றில் முதல் முறையாக நடக்கும் விஷயம்.. சந்திரசேகரன் ராஜினாமாவால் ஷாக்!
டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக இருந்த தமிழரும், டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவுமான என்.சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்று நடத்த திட்டமிட்டு இருந்த AGM கூட்டத்தை ஒத்திவைத்து, ரத்து செய்யப்பட்டு உள்ளது.
டாடா குழுமத்தில் தாய் நிறுவனம் தான் டாடா சன்ஸ், இந்த நிறுவனத்தின் கீழ் தான் அனைத்து டாடா குழும நிறுவனங்களும் இயங்கி வருகிறது. டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் இருந்து போதுமான நபர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாத நிலையில் AGM கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் திட்டமிட்டப்படி துவங்கியது இதில் சந்திரசேகரன் மற்றும் இதர சில நிர்வாகிள் நேரடியாக டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமாக பாம்பே ஹவுஸ்-ல் இருந்து கலந்துக்கொண்டனர். டாடா டிரஸ்ட் சார்பில் நோயல் டாடா மற்றும் மெஹில் மிஸ்திரி ஆன்லைன் வாயிலாக கலந்துக்கொண்டனர்.
ஆனால் இரு முக்கிய டிரஸ்ட் அமைப்புகளான சார் தோரப்ஜி டாடா டிரஸ்ட், சார் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் கூட்டு உறுப்பினர்கள் சட்ட சிக்கல் காரணமாக கலந்துக்கொள்ள முடியாத நிலை உருவானது. இதனால் AGM கூட்டம் நடந்த மாற்று தேதியை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
டாடா குழும வரலாற்றில் போதுமான நபர்கள் இல்லாத காரணத்தால் முதல் முறையாக வருடாந்திர பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது டாடா சன்ஸ் நிர்வாக குழுவிற்கு கருப்பு நாளா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இன்று நடக்க திட்டமிட்டு இருந்து கூட்டத்தில் 3 முக்கியமான விஷயங்களுக்கு தீர்வு காணப்பட திட்டமிடப்பட்டு இருந்தது,
1. சந்திரசேகரனுக்கு டைரக்டர் பதவியை மீண்டும் கொடுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்பட திட்டமிட்டப்பட்டது. ஆனால் சந்திரேகரன் இக்கூட்டம் நடப்பதற்கு முன்பே ராஜினாமா செய்துள்ள நிலையில் நிர்வாக குழு இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு குழு சந்திசேகரனுக்கு திரும்பவும் இப்பதவியில் பணியாற்ற அழைக்க வேண்டும். இதற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறப்பட்டது.
2. டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவரை தேர்வு செய்ய 5 பேர் கொண்ட சிறப்பு தேர்வு குழு அமைப்பது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட திட்டமிடப்பட்டன.
3. இக்கூட்டத்தில் சந்திரசேகரனுக்கு டைரக்டராக தொடர அனுமதி கொடுக்காத பட்சத்தில் அவரால் சேர்மன் ஆக தொடர முடியாது. இதனால் இடைகால டாடா சன்ஸ் சேர்மன் ஆக புதிய நபரை நியமிக்கும் முக்கிய பணியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இடைக்கால சேர்மன் பதவி மூலம் டாடா குழும நிறுவனங்களின் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்.

