
முன்னெச்சரிக்கை ஸ்கானொன்றுக்காக வைத்தியசாலைக்கு இலங்கையின் தினேஷ் சந்திமால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தார். காலியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாள் காலையில் நான்கு ஓட்டங்களை பாய்ந்து தடுக்க முற்பட்டபோது தனது தோட்பட்டை, கழுத்தில் காயமடைந்திருந்தார்.
பின்னர் தலைச்சுற்றல் பிரதியீடாக பிற்பகல் வேளையில் அறிமுக துடுப்பாட்டவீரரான பசிந்து சூரியபண்டார மூலம் சந்திமால் பிரதியிடப்பட்டிருந்தார்.
தோட்பட்டையில் பலமாக வீழ்ந்த சந்திமாலின் உடலுக்கு மேலால் கால்கள் சென்று கழுத்தும் தோட்பட்டையும் அவற்றுக்கு கீழ் சென்றிருந்தன. உடனடியாக நிலைகுலைந்த சந்திமால் கடும் வலியால் துடித்து கழுத்து, தலை, தோட்பட்டையை பிடித்த வண்ணம் இருந்தார். பின்னர் மெதுவாக நடந்து களத்தை விட்டுச் சென்றிருந்தார்.

