தங்கத்தில் பணத்தை கொட்டும் சீனா.. ஆட்டம் துவங்கியது.. இனி தினம் தினம் தீபாவளி தான்..!
உலகளவில் தங்கம் விலையிலும், அதன் முதலீட்டு அளவிலும் பெரும் மாற்றங்கள் எதிர்கொண்டு வரும் வேளையில் தங்கம் நுகர்விலும், முதலீட்டிலும் பெரிய தலையாக இருக்கும் சீனா அதிரடியாக களமிறங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
8 மாதங்களுக்கு முன்பு சீனாவின் அதிரடி முதலீட்டின் வாயிலாக தான் 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 18000 ரூபாய்க்கும் அதிகமாகவும், வெள்ளி விலை 420 ரூபாய்க்கும் உயர்த்தியது யாரும் மறந்திருக்க மாட்டோம்.

ஈரான் – அமெகிக்கா – இஸ்ரேல் மத்தியிலான போர் முடிவை எட்டாமல் ரஷ்யா – உக்ரைன் போர் போல் தொடர்ந்து நீண்டு கொண்டு இருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய முக்கியமாக காலக்கட்டத்தில் உலக நாடுகளும் சரி, முதலீட்டாளர்களும் சரி, தங்களுடைய முதலீட்டை பாதுகாக்க பலதரப்பட்ட முயற்சிகளை எடுத்து வரும் வேளையில் சீனாவுக்கு தற்போது தங்கம் முக்கியமான முதலீடாக மாறியுள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஜூலை மாதம் சரிந்துள்ளது, அந்நாட்டின் தொழிற்துறை உற்பத்தி வருடாந்திர அடிப்படையில் 4.5 சதவீதம் வரையில் அதிகரித்தாலும், ஜூன் மாதத்தின் 5.3 சதவீதத்துடன் ஒப்பிடும் போது குறைவு தான். இதேபோல் ரீடைல் விற்பனை ஜனவரி மாதம் பதிலான 2.5 சதவீத வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வெறும் 0.6 சதவீதமாக குறைந்துள்ளது. இதுமட்டும் நிலையான சொத்துக்கள் மீதான முதலீடுகள் 6.7 சதவீதம் சரிந்துள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடுகளின் மதிப்பு 19.2 சதவீதம் குறைந்துள்ளது.
இப்படி சுத்தி சுத்தி அடிவாங்க துவங்கியுள்ள காரணத்தால் சீன முதலீட்டு சந்தை தங்கத்திற்கு பக்கம் திரும்பியுள்ளது. ஜூலை மாதம் சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள் பேங்க் ஆப் சீனா கிட்டத்தட்ட 20 டன் தங்கத்தை வாங்கியுள்ளது, இதன் மூலம் சீனாவின் மொத்த தங்க இருப்பு 2,366 டன்னாக உயர்ந்துள்ளது. இதன் முலம் கடந்த 21 மாதங்களாக சீனா தங்கத்தை தொடர்ந்து வாங்கி வருகிறது.
இதேபோல் சீன மக்கள் தங்க ஈடிஎப்-ல் சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை ஜூலை மாதத்தில் மட்டும் முதலீடு செய்துள்ளனர்.
இதன் மூலம் மக்களும், அரசு அமைப்புகளும் தங்கம் வங்குவதை தொடர்ந்து அதிகரித்து வருவது உறுதியானது மட்டும் அல்லாமல் தங்கம் விலை அதிகமாக இருக்கும் வேளையிலும் இது நடக்கிறது என்பதால் பல்வேறு கேள்விகளை முதலீட்டு சந்தையில் எழுந்து வருகிறது.
ஆனால் சீனாவில் நடக்கும் விசித்தரமான விஷயம் என்னவென்றால் எப்போதும் அதிக வர்த்தகத்தை எதிர்நோக்கும் தங்க மொத்த விற்பனை சந்தையில் வர்த்தகம் 8 சதவீதம் வரையில் குறைந்து 80 டன்னாக மட்டுமே உள்ளது. இதேபோல் தங்க நகை விற்பனையிலும் மந்தமான நிலையே உள்ளது.
இதனால் சீன மக்கள் தங்கத்தை முதலீடாக பார்க்க துவங்கியுள்ளதாலும், அதை எளிதாக பணமாக மாற்றும் நோக்கில் தங்கத்தை உலோகமாக வாங்காமல், டிஜிட்டலாக வாங்க துவங்கியுள்ளது தெரிகிறது.
இதேபோல் ஜப்பானும் அந்நாட்டின் பத்திர முதலீட்டு சந்தையில் வட்டி அதிகரித்துள்ள காரணத்தால் தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளது. இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
