தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இளைய தளபதி விஜய் உடன் இவர் நடித்த காதலுக்கு மரியாதை ,கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட படங்களை இன்றும் ரசிப்பவர்கள் உண்டு. அஜித்துடன் அமர்க்களம், மாதவனுடன் அலைபாயுதே, பிரஷாந்துடன் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட அனைத்து படங்களுமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘ராஜா சின்ன ரோஜா ‘என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ‘அலைபாயுதே’ திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றார்.பின்னர் நடிகர் அஜித்துடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்து கொண்டார்.சினிமா துறையில் இருந்து முழுவதுமாக விலகினார்.
திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர் சமூக வலைதளங்களில் கூட பல வருடமாக தலை காட்டாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் இன்ஸ்டாகிராம் கணக்குத் துவங்கி அதில் தன் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஷாலினியின் பெயரை தவறாக பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் அவரது பெயரில் போலியான எக்ஸ் பக்கத்தை உருவாக்கியுள்ளார்.அது ஷாலினியின் எக்ஸ் பக்கம் என்று நம்பி சுமார் 80.1K ஃபாலோவர்ஸ் பின் தொடர்ந்துள்ளனர்.இந்த தகவலை ஷாலினியின் கவனத்திற்கு கொண்டு செல்ல, இது குறித்து எச்சரிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலியான எக்ஸ் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டு, இது தனது id இல்லை என்று கூறினார்.எனவே யாரும் இதை பின்தொடர வேண்டாம் என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

