
மஹவ, திப்பட்டுவாவி பிரதேசத்தில் காயமடைந்து அதன் கூட்டத்திலிருந்து 2026 ஒகஸ்ட் 16 ஆம் திகதியன்று பிரிந்த யானைக்குட்டிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
குறித்த யானைக்குட்டிக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தேவையான வைத்திய உதவிகளை இலங்கை கடற்படை, இராணுவம், விமானப்படை மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து மேற்கொண்டனர்.
மேலும், இலங்கை கடற்படை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வனவிலங்குகள் உட்பட இயற்கை சூழலின் பல்லுயிர் பாதுகாப்பில் தொடர்ந்து பங்களித்து வருகிறது.






