Last Updated:
இத்திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கர் மரவள்ளி பயிருக்கு ரூ.30,924 காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாரத்தில் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர் சேதத்தால் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) உடனடியாக இணைந்து பயன்பெறுமாறு தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.


