மேலும், ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள ‘வாட்டர் கூலர்’ இயந்திரங்களில் தீங்கு விளைவிக்கும் ’ஈ-கோலி’ என்ற மனிதமல பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் உள்ள கோவை மற்றும் பாலக்காடு, தென் மத்திய ரயில்வேயில் ஹைதராபாத், மத்திய ரயில்வேயில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம், பிவாண்டி ரோடு, கல்யாண் மற்றும் லோனாவாலா, கிழக்கு ரயில்வேயில் மாதாபூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள குடிநீரில் இந்த ‘ஈ-கோலி’ பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

