• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு.. தன்னிச்சையாக முடிவெடுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்? | Shock in Tamil Nadu as Private Bus Fares Hiked Without Prior Notice

GenevaTimes by GenevaTimes
August 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு.. தன்னிச்சையாக முடிவெடுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்? | Shock in Tamil Nadu as Private Bus Fares Hiked Without Prior Notice
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vignesh Selvaraj

Time
Published: Saturday, August 15, 2026, 23:01 [IST]

சென்னை: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் ரூ.19 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்தில் இருந்து இயங்கக்கூடிய சுமார் 50 கி.மீ தொலைவு வரையிலான எல்லைகளைக் கொண்ட தனியார் நகரப் பேருந்துகளில், பேருந்து உரிமையாளர்கள் திடீரென கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அதன்படி பயணக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.19 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

Shock in Tamil Nadu as Private Bus Fares Hiked Without Prior Notice

மேலும், சேலத்தில் இருந்து அருகில் உள்ள பிற வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தினசரி வேலை, பள்ளி, கல்லூரிக்கு தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கட்டண உயர்வு மட்டுமின்றி, கிராமப்புறங்களில் இருந்து சேலம் நகருக்குத் தனியார் பேருந்துகளில் கொண்டு வரப்படும் காய்கறி கூடைகளுக்கும் வழக்கத்தை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் என பல்வேறு மாவட்டங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், சிறு வியாபாரிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தனியார் நகரப் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிப்பதாகப் புகார் கூறியுள்ள பயணிகள், பொதுமக்களின் சுமையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகள் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் சட்டசபையில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த அனுமதிக்குமாறு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பயணிகளின் சுமையைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

English summary

The public is in Tamil Nadu of shock after private town bus fares were abruptly hiked without any prior notice—across various districts, including Salem, Dharmapuri, Krishnagiri, Cuddalore and Tiruvannamalai.

Read More

Previous Post

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் : ட்ரம்பிற்கு ஈரான் தக்க பதிலடி

Next Post

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது தங்கம் விலை என்ன? 10 கிராம் தங்கமே இவ்வளவு தானா? | ₹1,000 Invested in Gold in 1947 Would Be Worth ₹17.1 Lakh Today: India’s 80-Year Gold Price Journey Explained

Next Post
1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது தங்கம் விலை என்ன? 10 கிராம் தங்கமே இவ்வளவு தானா? | ₹1,000 Invested in Gold in 1947 Would Be Worth ₹17.1 Lakh Today: India’s 80-Year Gold Price Journey Explained

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது தங்கம் விலை என்ன? 10 கிராம் தங்கமே இவ்வளவு தானா? | ₹1,000 Invested in Gold in 1947 Would Be Worth ₹17.1 Lakh Today: India’s 80-Year Gold Price Journey Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin