இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இன்று (15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார்.
சுதந்திர தின நிகழ்வு
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதுடெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்தியாவின் சுதந்திர தினமான இன்று (15) சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

