• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முக்கிய விசாரணை

GenevaTimes by GenevaTimes
August 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முக்கிய விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் (13) நிறைவு பெற்றுள்ள நிலையில் எதிர்த்தரப்பு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு அங்கமான முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சி விசாரணைகள் மூவரடங்கிய கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (13) பிற்பகல் நிறைவடைந்தன.



நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில் சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.

24 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் 


நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பில், 2023 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் இதுவரை மொத்தம் 547 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 2076 வழக்குச் சான்றுகளும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முக்கிய விசாரணை | Petitioner Evidence In Easter Attack Case Complete



முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளிடம் எதிர்த்தரப்பு வாக்குமூலங்களைக் கோருவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்த்தரப்பு விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

தொடர் குண்டுத் தாக்குதல்



2017 நவம்பர் 01 முதல் 2019 ஏப்ரல் 21 வரை அனுராதபுரம், மாவனெல்ல, கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, காத்தான்குடி, கொழும்பு, தெஹிவளை போன்ற இடங்களில், சஹ்ரான் ஹாசீம் மற்றும் மரணித்த ஏனையவர்ளுடன் இணைந்து தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பி, ஆயுதப் பயிற்சி பெற்று, சதித் திட்டங்களை தீட்டி தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை என்பது முதன்மை குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முக்கிய விசாரணை | Petitioner Evidence In Easter Attack Case Complete



அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக வாய்மொழி மூலமான குற்றச்சாட்டு விபரங்களை கோருவதற்குப் போதுமான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் திருப்தி தெரிவித்தது.


இந்தநிலையில், நீதிமன்றத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மூலம் சந்தேகநபர்களுக்குத் தமிழில் விளக்கிக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

PKR வாக்காளர்களைக் குறை கூறாமல், தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார் இளைஞர் தலைவர் | Makkal Osai

Next Post

Post Office | ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸின் ஜாக்பாட் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Next Post
Post Office | ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸின் ஜாக்பாட் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Post Office | ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸின் ஜாக்பாட் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin