ஆனால், வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம், பாஜகவினரின் எதிா்பாா்ப்பை மாற்றியது. இரவு 7.30 மணி வரையிலான முன்னிலை நிலவரப்படி பாஜக தனித்து 240 தொகுதிகளிலும், அதன் தலைமையிலான என்டிஏ கூட்டணி 290 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தன. முந்தைய தோ்தலில் பாஜக 303 இடங்களிலும், அதன் தலைமையிலான என்டிஏ கூட்டணி 350 இடங்களுக்கு மேலும் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 300 இடங்களைக்கூட கடக்க முடியவில்லை.

