• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 13, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெர்தே, புதன்கிழமை (ஆகஸ்ட் 12) அன்று, போலீசாரின் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக, கம்போங் ராஜா அருகே உள்ள சுங்கை கம்போங் கோங் மக்சோம் ஆற்றில் குதித்ததாகக் கூறப்படும் 28 வயது உள்ளூர் இளைஞர், மறுநாள் காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பெசூட் காவல் துறை கண்காணிப்பாளர் முகமது ரோசைம் அப் ரஹீம் கூறுகையில், அவர் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில், காலை 11.30 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவரின் உடலைக் கண்டெடுத்தனர்.

புதன்கிழமை மாலை 5.45 மணியளவில், ஆற்றங்கரை அருகே போதைப்பொருள் வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டிருந்தபோது அந்த நபர் தப்பி ஓடிவிட்டார் என்று அவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் ஆற்றில் குதித்துவிட்டுத் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது  என்று கூறிய அவர், உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெசூட் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு மரக் கொட்டகையில் நடத்தப்பட்ட மேலதிக சோதனையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாக கண்காணிப்பாளர் ரோசைம் தெரிவித்தார்.

Previous articleமாணவனைத் தாக்கியதாகவும், அவனது தாயை அறைந்ததாகவும் சந்தேகிக்கப்படும் ஆசிரியரை போலீசார் கைது
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

SBI-ன் ஜாக்பாட் திட்டம்.. மாதம் ரூ.600 சேமித்தால் ரூ.1.10 லட்சம் கிடைக்கும்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Next Post

Tamilmirror Online || 27 ஆண்டுகளில் ஐரோப்பாவின் முதல் சூரிய கிரகணம்

Next Post
Tamilmirror Online || 27 ஆண்டுகளில் ஐரோப்பாவின் முதல் சூரிய கிரகணம்

Tamilmirror Online || 27 ஆண்டுகளில் ஐரோப்பாவின் முதல் சூரிய கிரகணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin