நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 244 இடங்களில் பாஜக முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 231 இடங்களில் முன்னணியில் உள்ளது.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 295 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அவர் தெரிவித்தது. “இந்தியா வென்றது. மோடி வீழ்த்தப்பட்டார். எண்ணிலடங்கா கொடுமைகளை செய்தனர். தேர்தலில் பெரிய அளவில் பணத்தை செலவிட்டனர். இருந்தும் மோடி மற்றும் அமித் ஷாவின் ஆணவம் அவர்களை வீழ்த்தியது. அயோத்தியிலும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:
பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுவீர்களா? – தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பிரதமர் மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். இந்த முறை தேர்தலில் 400+ இடங்களை வெல்லும் என்று கூறிய அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என மம்தா தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
