தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, தொரந்து 3-வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. மக்களின் அன்பிற்கு அடிபணிகிறேன்.மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், கடந்த 10 ஆண்டு நல்லாட்சி தொடரும்.
வெற்றிக்காகக் கடினமாக உழைத்த பாஜக தொண்டர்களை வணங்குகிறேன். அவர்களது கடின உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனப் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

