நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயர்பி தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் சிலர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு 11 பேர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தேயிலைத் தோட்டத்திலுள்ள மரமொன்றில் இருந்த குளவிக் கூட்டை பறவை ஒன்று தாக்கிய நிலையில், குளவிகள் இவ்வாறு அதிலிருந்து வெளியே வந்துள்ளன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதாகவும், மேலும் 3 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


