கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரானும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தி இருக்கின்றன.
கடந்த மாதம் நேட்டோ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் துருக்கி சென்று இருந்தார். அவர் துருக்கி செல்லும்போதே ஈரானின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகவும் ரகசியமாகத்தான் சென்றார். கத்தார் நன்கொடையாக வழங்கிய ஜெட் விமானத்தை ட்ரம்ப் அங்காராவுக்கு செல்ல பயன்படுத்தினார்.
ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக துருக்கியை விட்டு வெளியேறும் போது பழைய ஏர்ஃபோர்ஸ் விமானம் ஒன்னைப் பயன்படுத்தினார், அந்த விமானம் மிகவும் சிறியது ஆகும். புதிய விமானத்தின் பாதுகாப்பின் மீது சந்தேகம் அடைந்து பழைய சிறிய விமானத்தை பயன்படுத்தினாரா அல்லது ஈரானுக்கு பயந்து பழைய சிறிய விமானத்தை பயன்படுத்தினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. துருக்கியில் மாநாடு முடிந்த பிறகு அவர் ஈரானுக்கு பயந்து அங்கிருந்து தப்பித்து வந்தது போன்று வந்து சேர்ந்து இருக்கிறார் என்கிறார்கள்.
அங்காராவில் வழக்கமான பாதுகாப்பு வாகனத்தில் வந்தால் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று கருதி மாநாடு நடந்த இடத்தில் இருந்து அங்காரா விமான நிலையத்திற்கு உணவு எடுத்துச்செல்லும் ஒரு லாரியில் ரகசியமாக பதுங்கி இருந்து விமான நிலையம் வந்திருப்பதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வந்து சேர்ந்த பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த விமானத்தை பயன்படுத்தாமல் வேறு விமானத்தை பயன்படுத்தி தனது நாட்டிற்கு சென்றார்.
இது குறித்து அமெரிக்காவின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவ் சியுங் கூறுகையில், “‘கத்தார் நன்கொடையாக வழங்கிய ஜெட் ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உயர்மட்ட பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சமீபத்தில் கூறியது போல், அமெரிக்காவின் பல எதிரிகள் அவர் மீது கண் வைத்துள்ளனர். மேலும் அந்த அச்சுறுத்தல்களைத் தீர்க்க நாங்கள் எங்கள் வசம் உள்ள ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துகிறோம்” என்று சியுங் கூறினார்.
