சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட முதல் குழு யாத்ரீகர்கள்.
முஸ்லிம்களின் புனித தளமான மெக்காவிற்கு நேற்று புறப்பட்டனர்.
சிங்கப்பூரிலிருந்து சுமார் 110 யாத்ரீகர்கள் புனித பயணத்தை தொடங்கியுள்ளனர்.
சமீப காலமாக அதிகரித்து வரும் கோவிட்-19 நோய் பரவல் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம், வெப்பநிலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு இடையே யாத்ரீகர்கள் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கவனமுடன் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

