• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆசனப்பட்டி அணிய மறுத்த சிறுவன் – கனடாவில் இரத்து செய்யப்பட்ட விமானம்

GenevaTimes by GenevaTimes
August 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆசனப்பட்டி அணிய மறுத்த சிறுவன் – கனடாவில் இரத்து செய்யப்பட்ட விமானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவில் சிறுவன் ஒருவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து விமானப் பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்ட சம்பவம், விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஒரு சிறு குழந்தை தனது இருக்கையில் நின்று கொண்டு  ஆசனப்பட்டி அணிய மறுத்ததால் முனையத்திற்கே திரும்ப வேண்டியிருந்தது என்று போர்ட்டர் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த 6 ஆம் திகதி விக்டோரியாவிலிருந்து டொரண்டோ (Toronto) நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ‘போர்ட்டர் எயார்லைன்ஸ்’ (Porter Airlines) விமானத்திலேயே இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு விதிமுறை


விமானம் புறப்படத் தயாரான போது, சிறுவன் ஒருவன் இருக்கையில் நின்றுகொண்டும் ஆசனப்பட்டி அணிய மறுத்தும் அடம்பிடித்துள்ளான்.

சிறுவனை ஆசனப்பட்டி அணிய வைப்பதற்கு பெற்றோர் மற்றும் விமானம் ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆசனப்பட்டி அணிய மறுத்த சிறுவன் - கனடாவில் இரத்து செய்யப்பட்ட விமானம் | Child Refuses To Wear Seat Belt Flight Cancelled

பாதுகாப்பு விதிமுறைகளின்படி இத்தகைய ஆபத்தான சூழலில் விமானத்தை செலுத்த முடியாது என்பதால், அதனை மீண்டும் முனையத்துக்கு கொண்டு சென்று அந்தச் சிறுவனையும் அவரது பெற்றோரையும் இறக்கிவிட ஊழியர்கள் தீர்மானித்தனர்.



இருப்பினும், இந்த தாமதம் காரணமாக நள்ளிரவுக்குப் பிறகு ஓடுபாதை (Runway) மூடப்பட்டதால், விமானத்தை  அன்றைய தினம் இயக்க முடியாமல் போனது. இதன் காரணமாக ஏனைய பயணிகள் அனைவரும் மறுநாளுக்கு வேறு விமானங்களில் மாற்றிப் பதிவு செய்யப்பட்டனர்.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய சூழல்களில் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் மற்றும் விமான நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த வோங் சென்: தேர்தல் ஆணையத்திற்கு அறிவித்த சபாநாயகர் | Makkal Osai

Next Post

சர்பராஸ் கான் மீண்டும் அணியில் தேர்வானது எப்படி? – 17 கிலோ எடை குறைப்பு.. காஷ்மீரில் பயிற்சி..! | Sarfaraz Khan

Next Post
சர்பராஸ் கான் மீண்டும் அணியில் தேர்வானது எப்படி? – 17 கிலோ எடை குறைப்பு.. காஷ்மீரில் பயிற்சி..! | Sarfaraz Khan

சர்பராஸ் கான் மீண்டும் அணியில் தேர்வானது எப்படி? - 17 கிலோ எடை குறைப்பு.. காஷ்மீரில் பயிற்சி..! | Sarfaraz Khan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin