உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கான போட்டி அட்டவணை நியாயமற்ற முறையில் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா மற்றும் பவுலர் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 16.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மிக மோசமான தோல்வியை இலங்கை தழுவிய நிலையில் அது குறித்து இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா மற்றும் சுழற் பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனா கூறியதாவது-
இலங்கை அணிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள போட்டிய அட்டவணை நியாயமற்ற முறையில் இருக்கிறது. நான்கு வெவ்வேறு இடங்களில் நாங்கள் விளையாட வேண்டும். போட்டி முடிந்த உடனேயே நாங்கள் விமானத்தை பிடிப்பதற்கு ஓட வேண்டி உள்ளது.
இருப்பினும் விமான நிலையத்தில் நாங்கள் சுமார் 8 மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நாங்கள் ஓட்டல் அறையில் இருந்து இரவு 8 மணிக்கு கிளம்புகிறோம் என்றால், எங்களுக்கு அதிகாலை 5 மணிக்குத் தான் விமானம்.
இதையும் படிங்க – நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் வெங்கடேஷ் ஐயர்… ரசிகர்கள் வாழ்த்து!
எனவே இந்த போட்டி அட்டவணைகள் நியாயமற்ற முறையில் இருக்கின்றன. ஓட்டல் அறையில் இருந்து விளையாட மைதானத்திற்கு வர வேண்டும் என்றால், 1 மணி நேரம் 40 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
