Last Updated:
இந்த அறிவிப்பின் படி சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 289 ரூபாயும், பொது ரக நெல்லுக்கு 159 ரூபாயும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 709 ரூபாய் 50 காசும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ள நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகை உயர்வு அறிவிப்புக்கு தஞ்சாவூர் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின்படி, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.289-ம், பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.159-ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50-ம் மாநில அரசின் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

