Last Updated:
இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
2026-ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டின் புகழை உயர்த்திய இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்துப் பாராட்டி கவுரவித்தார். இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, வீரர்கள் பெற்ற வெற்றிகள் வெறும் பதக்கங்களோடு நின்றுவிடாமல், விளையாட்டுத் துறையில் ஈடுபட நினைக்கும் புதிய தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாகவும் முன்மாதிரியாகவும் திகழ்கின்றன என்று பாராட்டினார்.


