• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்தியாவின் எதிரி”… லஷ்கர் இ தொய்பா முக்கிய தலைவன் மர்மச்சாவு.. பாகிஸ்தான் மசூதி வாசலில் நடந்த சம்பவம் | Lashkar-e-Taiba terrorist who collapsed and died right at the entrance of a mosque in Pakistan

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“இந்தியாவின் எதிரி”… லஷ்கர் இ தொய்பா முக்கிய தலைவன் மர்மச்சாவு.. பாகிஸ்தான் மசூதி வாசலில் நடந்த சம்பவம் | Lashkar-e-Taiba terrorist who collapsed and died right at the entrance of a mosque in Pakistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Sunday, August 9, 2026, 16:30 [IST]

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் கொல்லப்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டு வந்த அந்த அமைப்பின் பொறுப்பாளர் மசூதி வாசலிலேயே சுருண்டு விழுந்து இறந்த நிலையில் அதன் பின்னணி பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானை மையப்படுத்தி லஷ்கர் இ – தொய்பா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் உள்ள முரித்கே என்ற இடம் தான் இந்த பயங்கரவாத அமைப்பின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது.

lashkar-e-taiba-terrorist-who-collapsed-and-died-right-at-the-entrance-of-a-mosque-in-pakistan

நம் நாட்டுக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்களுடன் இந்த பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போதும் காஷ்மீரில் குழப்பத்தை ஏற்படுத்த துடிக்கிறது. காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு ஆட்களை சேர்க்கவும் துடித்து வருகிறது.

இஸ்ரேல் - அமெரிக்கா தலையில் இடி.. மொஜ்தபா கமேனி நலமாக இருக்கிறார்.. வீடியோ வெளியிட்ட ஈரான்

இஸ்ரேல் – அமெரிக்கா தலையில் இடி.. மொஜ்தபா கமேனி நலமாக இருக்கிறார்.. வீடியோ வெளியிட்ட ஈரான்

இதனால் தான் இந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இந்த பயங்கரவாத அமைப்பினர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகின்றனர். இதற்கிடையே தான் சமீபகாலமாக பாகிஸ்தானில் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர் சுட்டு கொல்லப்பட்டும், மர்மமான முறையிலும் இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தான் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த காரி சையத் அப்துல் அஜிஸ் என்பவன் வசித்து வந்தான். இவன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராகவும், நம் நாட்டின் ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொல்லப்படும்போது அவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து உதவிகளை பெற்று கொடுக்கும் பணியின் பொறுப்பாளராகவும் காரி சையத் அப்துல் அஜிஸ் செயல்பட்டு வந்தான்.

இந்தியாவுக்கு வார்னிங்.. சவுதி - பாகிஸ்தான் - துருக்கி உருவாக்கும் 'சன்னி நேட்டோ' படை! ஷாக் பின்னணி

இந்தியாவுக்கு வார்னிங்.. சவுதி – பாகிஸ்தான் – துருக்கி உருவாக்கும் ‘சன்னி நேட்டோ’ படை! ஷாக் பின்னணி

இதனால் அவன் நம் நாட்டுக்கு எதிரியாகவும், பெரும் தலைவலியாகவும் இருந்து வந்தான். இவனை மத்திய அரசு தீவிரமாக தேடிவந்தது. இந்நிலையில் தான் தற்போது பயங்கரவாதி காரி சையத் அப்துல் அஜிஸ் மர்மமான முறையில் மசூதி வாசலில் இறந்துள்ளான். இஸ்லாமாபாத்தில் உள்ள குவா மசூதிக்கு நேற்று தொழுகைக்கு பயங்கரவாதி காரி சையத் அப்துல் அஜிஸ் சென்றான். மசூதியில் நுழைவு வாயிலில் திடீரென்று அவன் மயங்கி விழுந்தான்.

இதனை பார்த்தவர்கள் அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவனது இறப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதேவேளையில் நேற்று தொழுகைக்கு முன்பு அவன் வழக்கத்துக்கு மாறாக இன்னொரு இடத்தில் உணவு சாப்பிட்டது தெரியவந்துள்ளது. இதனால் அவனது சாவில் மர்மம் நீடித்து வருகிறது. மாரடைப்பால் இறந்தானா? இல்லாவிட்டால் உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டானா? என்பது தெரியவில்லை.

30 பேரை கொன்னுட்டாங்க.. இந்திய உளவுத்துறையால் கதறும் பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு

30 பேரை கொன்னுட்டாங்க.. இந்திய உளவுத்துறையால் கதறும் பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு

எது எப்படியோ, நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வந்த பயங்கரவாதி காரி சையத் அப்துல் அஜிஸ்ஸின் கதை முடிந்தது நமக்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்திய உளவுத்துறை பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை கொன்று வருகிறது என்று அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். இதனை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்து வருகிறது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ரிஸ்வான் ஹனிஃப் கதறிய வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அதில் அவன் கூறியிருந்ததாவது:

”கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் நம் இயக்கத்தை சேர்ந்த 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய உளவுத்துறை ஏஜென்ட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, முசாபரபாத் மற்றும் ராவலகோட் உள்ளிட்ட நகரங்களில் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் காஷ்மீரிலும் நம்மை அமைதியாகவும், நிம்மதியாகவும் இயங்க இந்திய உளவு அமைப்பினர் அனுமதிக்காமல் உள்ளனர். ஏஜென்ட்டுகள் மூலம் நம் இயக்கத்தவர்களை கொன்று குவித்து வருகின்றனர்” என்று கூறியிருந்தான். இப்போது பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைய சேர்ந்த முக்கிய காமாண்டன் மர்மமான முறையில் இறந்துள்ளான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

English summary

Lashkar-e-Taiba Commander who had been responsible for providing assistance to the families of the LeT terrorists killed in Jammu and Kashmir-after he collapsed and died right at the entrance of a mosque.

Read More

Previous Post

நிஜமான பாபா வங்காவின் 2 கணிப்புக்கள்…! அடுத்தது புடினின் பதவி விலகல்

Next Post

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; சட்டமன்றத்தில் நாளை தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல் அமைச்சர் விஜய் … | Makkal Osai

Next Post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; சட்டமன்றத்தில் நாளை தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல் அமைச்சர் விஜய் … | Makkal Osai

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; சட்டமன்றத்தில் நாளை தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல் அமைச்சர் விஜய் ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin