• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.5 லட்சம் முதல் ரூ.50 கோடி சம்பளம் வரை: மாஸ் இயக்குநராக இருந்து மாஸ் ஹீரோவான லோகேஷ் கனகராஜ்!! | From ₹5 Lakh to ₹50 Crore: Lokesh Kanagaraj’s Incredible Rise as Tamil Cinema’s Mass Hero

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.5 லட்சம் முதல் ரூ.50 கோடி சம்பளம் வரை: மாஸ் இயக்குநராக இருந்து மாஸ் ஹீரோவான லோகேஷ் கனகராஜ்!! | From ₹5 Lakh to ₹50 Crore: Lokesh Kanagaraj’s Incredible Rise as Tamil Cinema’s Mass Hero
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.5 லட்சம் முதல் ரூ.50 கோடி சம்பளம் வரை: மாஸ் இயக்குநராக இருந்து மாஸ் ஹீரோவான லோகேஷ் கனகராஜ்!!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனகராஜ். 10 ஆண்டுகளிலேயே தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக மட்டுமில்லாமல் மாஸ் ஹீரோவாகவும் உருவெடுத்திருக்கிறார்.

2017ஆம் ஆண்டு மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தனித்துவமான திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி படம் பிளாஸ் பஸ்டர். மூன்றாவது படத்திலேயே விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி இருவரின் கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் செம ஹிட்.

ரூ.5 லட்சம் முதல் ரூ.50 கோடி சம்பளம் வரை: மாஸ் இயக்குநராக இருந்து மாஸ் ஹீரோவான லோகேஷ் கனகராஜ்!!

அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து விக்ரம் படம் எடுத்து லோகி சினிமா யுனிவர்ஸ் என்ற கான்செப்டை தமிழ் சினிமால் கொண்டு வந்து தன்னுடைய தனித்துவமான ஸ்டைல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அதில் சர்ப்பிரைஸ் நிறைந்த கதை இருக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தார்.

மீண்டும் ஒரு முறை விஜய் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தை இயக்கினார். அதுவும் நல்ல ஹிட் ஆனது. பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் 2017 முதல் 2026 வரையிலான இந்த 10 ஆண்டுகளில் லோகேஷ் கனகராஜின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் எந்த இயக்குநருக்கும் கிடைக்காத ஒரு வளர்ச்சி என கூறலாம்.

தமிழ் சினிமாவின் அனைத்து மாஸ் ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கிவிட்டார். இப்போது ஹீரோ அவதாரமும் எடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் டிசி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் மாஸ் ஹீரோவாகவும் உருவெடுத்துள்ளார்.

ரூ.5 லட்சம் முதல் ரூ.50 கோடி சம்பளம் வரை: மாஸ் இயக்குநராக இருந்து மாஸ் ஹீரோவான லோகேஷ் கனகராஜ்!!

தனது கடின உழைப்பால் குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்ட லோகேஷ் கனகராஜ், தன்னுடைய முதல் படமான மாநகரம் படத்திற்கு 5 லட்சம் ரூபாய் தான் சம்பளமாக பெற்றாராம். அதுவே கடைசியில் கூலி படத்திற்கு இவர் பெற்ற சம்பளம் 50 கோடி ரூபாய். அந்த வகையில் லோகேஷ் கனகராஜின் வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. அண்மையில் இவர் நடிப்பில் டிசி படம் வெளியானது. இதற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் சம்பளத்தையும் உயர்த்துவார் என சொல்லப்படுகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த லோகேஷ் கனகராஜ் பல சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.லெக்சஸ் (Lexus) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற சொகுசு ரக கார்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் லெக்சஸ் கார் நடிகர் கமல்ஹாசனால் லோகேஷ் கனகராஜூக்கு பரிசாக வழங்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2, ரோலெக்ஸ் போன்ற படங்களை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. டிசி படத்தின் வெற்றியை அடுத்து அவர் நடிகராகவும் ஒரு ரவுண்ட் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article

English summary

From ₹5 Lakh to ₹50 Crore: Lokesh Kanagaraj’s Incredible Rise as Tamil Cinema’s Mass Hero

ரூ.5 லட்சத்தில் தொடங்கி ரூ.50 கோடி வரை: மாஸ் இயக்குநராக இருந்து மாஸ் ஹீரோவான லோகேஷ் கனகராஜ்!!- Lokesh Kanagaraj’s journey from earning a reported ₹5 lakh for his debut film Maanagaram to receiving ₹50 crore for Rajinikanth’s Coolie reflects one of the most remarkable success stories in Tamil cinema.

Story first published: Sunday, August 9, 2026, 12:34 [IST]

Other articles published on Aug 9, 2026

Read More

Previous Post

15 வயதா? 18 வயதா? – வைபவ் சூர்யவன்ஷியின் வயது சர்ச்சை குறித்து ஆஸ்திரேலிய புயல் பிரெட் லீ ஓபன் டாக்!

Next Post

இந்த ஆண்டின் மலேசிய தினக் கொண்டாட்டங்களை நடத்துகிறது கூச்சிங் – Malaysiakini

Next Post

இந்த ஆண்டின் மலேசிய தினக் கொண்டாட்டங்களை நடத்துகிறது கூச்சிங் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin