• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி மக்கள் தொடர் போராட்டம்!

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி மக்கள் தொடர் போராட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற
அனுமதிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 8ஆவது வாரமாகவும் தொடர்
அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாலி சந்தியில் இன்று (09) நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது நீண்டகாலமாக தமது காணிகள் அரச
படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களால் சொந்த நிலங்களுக்குத் திரும்ப
முடியாத நிலை தொடர்வதாக மக்கள் தெரிவித்தனர்.

“எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும்”, “பூர்வீக நிலங்களில் மீள்குடியேற
அனுமதிக்க வேண்டும்”, “மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்”
உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணிகளை மீட்பதற்காக போராட்டம்

பல ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாத காரணத்தால்,
குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி மக்கள் தொடர் போராட்டம்! | Palali People Protest For Demanding Land Release


தமது காணிகளை விடுவிப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால்
உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவை முழுமையாக
நடைமுறைப்படுத்தப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதன் காரணமாகவே தமது காணிகளை மீட்பதற்காக தொடர்ச்சியான போராட்டத்தை
முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறி, இயல்பான வாழ்க்கையை முன்னெடுப்பதே
தங்களது பிரதான கோரிக்கை என தெரிவித்த மக்கள், எந்தவித வன்முறையுமின்றி
அமைதியான முறையில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும்
குறிப்பிட்டனர்.

பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி மக்கள் தொடர் போராட்டம்! | Palali People Protest For Demanding Land Release

எனவே, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளித்து,
அவர்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

IJNஇல் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் மற்றும் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரை சந்தித்த பிரதமர் தம்பதி | Makkal Osai

Next Post

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வருமா? 8-வது ஊதியக் குழுவிடம் ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வருமா? 8-வது ஊதியக் குழுவிடம் ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் | India News (இந்தியா செய்திகள்)

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வருமா? 8-வது ஊதியக் குழுவிடம் ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin