இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 2) இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் இரண்டு குழந்தைகளுக்கு நீங்கள் கொடுத்த ஆசியும்,அன்பையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம் என்று கேட்டுக் கொண்டார்.ஆர்த்தியும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக கூறினார்.
சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மறைந்த ராணுவ வீரர் முகுந்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது.
கதாநாயகியாக சாய் பல்லவி நடிப்பதாகவும், படத்தின் டீசர் வெளியாகி, இதுவரை 25 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடத்தி வந்தார். ஆனால் அமரன் படத்தில் அதற்கு மாறாக அதிரடி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். ராணுவ வீரரை போன்று உடல் கட்டமைப்பை பெறுவதற்கு அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்திருக்கிறார்.இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டது. சில காட்சிகள் மட்டும் சென்னை கேரளா உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

