• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை ரூ.7000 உயர்வு.. ஆடிப்போன மிடில் கிளாஸ் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியான விஷயம்! | Gold Jumps Rs 7,000 per 10 Grams in a Week: Weak US Jobs Data Sparks Fresh Rally in Chennai

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை ரூ.7000 உயர்வு.. ஆடிப்போன மிடில் கிளாஸ் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியான விஷயம்! | Gold Jumps Rs 7,000 per 10 Grams in a Week: Weak US Jobs Data Sparks Fresh Rally in Chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை ரூ.7000 உயர்வு.. ஆடிப்போன மிடில் கிளாஸ் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியான விஷயம்!

தங்கம் மீண்டும் முக்கியமான முதலீடாக மாறும் காலம் வந்துவிட்டது, பிப்ரவரி மாதம் அமெரிக்கா- ஈரான் – இஸ்ரேல் போர் துவங்கிய நாளில் இருந்து கச்சா எண்ணெய், டாலர் மதிப்பு உயர்ந்த காரணத்தால் தங்கம் தனது முதலீட்டு ஈர்ப்பை இழந்து அதன் விலை குறைய துவங்கியது.

ஆனால் ஈரான் போர் பதற்றம் குறைந்து பேச்சுவார்த்தைக்குள் நுழைந்த நாளில் இருந்து தங்கம் விலை குறிப்பாக ஆகஸ்ட் மாதம் முதல் உயர்வுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வெளியான அமெரிக்காவின் லேலைவாய்ப்பு தரவுகள் மூலம் அடுத்த சில மாதங்களுக்கு (ஈரான் போர் மீண்டும் வெடிக்காத வரை) தங்கம் முக்கியமான முதலீடாக மாற உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் விலை ரூ.7000 உயர்வு.. ஆடிப்போன மிடில் கிளாஸ் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியான விஷயம்!

இன்று சென்னை ரீடைல் சந்தையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 65 ரூபாய் அதிகரித்து 13,965 ரூபாயாக உள்ளது, இதன் மூலம் வாரம் மட்டும் தங்கம் விலை 10 கிராமுக்கு சுமார் 7000 ரூபாய் உயர்ந்து 4.5 சதவீதம் வரையிலான லாபத்தை தங்க முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.

இதேவேளையில் வெள்ளி விலை இன்று ரீடைல் சந்தையில் மாறாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே உள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதம் வெள் விலை கிலோவுக்கு 15000 ரூபாய் அதிகரித்து 6.38 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை போலேவ தங்கத்தை விடவும் வெள்ளி விலை அதிகமாக உயர்வது கவனிக்கதக்க விஷயமாக உள்ளது.

கடந்த ஆண்டு தொழிற்துறை வளர்ச்சி, இறக்குமதி அதிகரிப்பு போன்ற காரணத்தால் வெள்ளிக்கான டிமாண்ட் பெரியளவில் உயர்ந்தது, தற்போதைய விலை உயர்வை பார்க்கும் போது மீண்டும் இதேபோன்ற நிலை உருவாகிறதா என்ற கேள்வி எழுகிறது. இல்லையெனில் இது வெறும் தற்காலிக முதலீட்டாளர்களின் ஆர்வமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடை அடுத்த சில நாட்களின் வர்த்தகத்தை கவனித்தால் முதலீட்டாளர்களுக்கு விடை கிடைத்துவிடும்.

தங்கம் விலை மீண்டும் முக்கியமான முதலீடாக மாறுவதற்கு முதலும் முக்கியமான காரணம், அமெரிக்காவின் வேலைலாய்ப்பு தரவுகள். நேற்று வெளியான ஜூன் மாத விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் தரவுகளில் 80000 கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20000 வேலைவாய்ப்புகள் சரிவை சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் முந்தைய இரண்டு மாத கணக்கீட்டையும் திருத்தியது மூலம் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. இதன் மூலம் பெரடல் ரிசர்வ் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் டாலர் மதிப்பு, பத்திர முதலீடுகள் மீதான முதலீடுகள் வெளியேறி தங்கம், வெள்ளி மீது திரும்பியுள்ளது.

மேலும் ஈரான் போர் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ள வேளையில் கச்சா எண்ணெய் விலை தேக்கமடைந்து பணவீக்கத்திற்கான அச்சமும் தணித்துள்ளது. இதனால் மீண்டும் தங்கம், வெள்ளி முக்கிய முதலீடாக முதலீட்டாளர்கள் மத்தியில் பார்க்க துவங்கியுள்ளனர்.

Share This Article

English summary

Gold Jumps Rs 7,000 per 10 Grams in a Week: Weak US Jobs Data Sparks Fresh Rally in Chennai

Gold Jumps Rs 7,000 per 10 Grams in a Week: Weak US Jobs Data Sparks Fresh Rally in Chennai — தங்கம் விலை ரூ.7000 உயர்வு.. ஆடிப்போன மிடில் கிளாஸ் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியான விஷயம்!

Story first published: Saturday, August 8, 2026, 12:30 [IST]

Other articles published on Aug 8, 2026

Read More

Previous Post

மைதானத்தில் மட்டுமல்ல.. வரி செலுத்துவதிலும் ரிக்கார்ட் ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர்

Next Post

பெட்ரோலியப் பொருட்களுக்கு கூடுதல் வரி… பாகிஸ்தான் முழுவதும் போராட்டம்..!

Next Post
பெட்ரோலியப் பொருட்களுக்கு கூடுதல் வரி… பாகிஸ்தான் முழுவதும் போராட்டம்..!

பெட்ரோலியப் பொருட்களுக்கு கூடுதல் வரி... பாகிஸ்தான் முழுவதும் போராட்டம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin