இலங்கையில் சுற்றுலா விசாக்களில் பணியாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 94 சீன நாட்டினருக்கு, கொழும்பு மேலதிக நீதிபதி நுவன் கௌசல்ய 7 மில்லியன் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைக்கப்பட்ட நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை ஏற்று நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சுற்றுலா விசாக்களில் இலங்கையில் பணியாற்றுவதும், விசா நிபந்தனைகளை மீறுவதும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஒப்பு கொள்ளப்பட்ட குற்றம்
அதன்படி, ராஜகிரிய பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு, விசா நிபந்தனைகளை மீறிப் பணியாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 94 சீன நாட்டவர்களும் தங்கள் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு சீன நாட்டவருக்கு தலா ரூ. 75,000/- அபராதம் வீதம் 94 சீன நாட்டவர்களுக்கும் ரூ. 70,50,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

