• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மியூச்சுவல் பண்டுகள் மூலம் அதிகம் சம்பாதிப்பது யார்..? வெளியானது முக்கிய தகவல்! | Who Earns the Most from Mutual Funds? Top 1.5% Distributors Grab 77% of Rs 27,335 Crore Commissions

GenevaTimes by GenevaTimes
August 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மியூச்சுவல் பண்டுகள் மூலம் அதிகம் சம்பாதிப்பது யார்..? வெளியானது முக்கிய தகவல்! | Who Earns the Most from Mutual Funds? Top 1.5% Distributors Grab 77% of Rs 27,335 Crore Commissions
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மியூச்சுவல் பண்டுகள் மூலம் அதிகம் சம்பாதிப்பது யார்..? வெளியானது முக்கிய தகவல்!

இன்றளவில் மியூச்சுவல் பண்ட் என்பது அனைத்து தரப்பு மக்களின் முக்கிய முதலீடாக உள்ளது, சிறிய அளவிலோ பெரிய அளவிலோ எல்லோரும் சில ஆயிரங்களையாவது எஸ்பிஐ வாயிலாக மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். இத்தகைய முதலீட்டில் பெரும்பாலான மக்கள் 8-15 சதவீதம் வரையில் லாபத்தை பெற்றாலும், இந்த மாபெரும் முதலீடுகளை நிர்வாகம் செய்யும் அமைப்பு தான் பெரிய அளவில் சம்பாதித்து வருகிறது.

நாம் செய்யும் முதலீட்டின் வாயிலாக மியூச்சவல் பண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ், வங்கி மற்றும் வங்கி தொடர்புடைய ப்ரோகரேஜ் நிறுவனங்கள், வெல்த் மேனேஜர்கள், பின்டெக் நிறுவனங்கள், தனிநபர் மியூச்சவல் பண்ட் டிஸ்டிரிபியூட்டர்கள், சிறு மியூச்சவல் பண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ் என 6 பிரிவினர்கள் மக்களின் மியூச்சுவல் பண்ட் மூலம் பெரும் வருமானம் ஈட்டுகின்றனர்.

மியூச்சுவல் பண்டுகள் மூலம் அதிகம் சம்பாதிப்பது யார்..? வெளியானது முக்கிய தகவல்!

இதில் அதிகம் வருமானம் ஈட்டுவது யார் என்பதை 1 Finance Magazine அமைப்பு AMFI (Association of Mutual Funds in India) நிறுவனம் வெளியிட்டுள்ள கமிஷன் தரவுகள் மூலம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

இதன் படி 2024-25ஆம் நிதியாண்டில் இந்திய மியூச்சவல் பண்ட் டிஸ்டிரிபியூஷன் துறையில் மொத்தமாக 27,335 கோடி ரூபாய் அளவிலான தொகையை கமிஷனாக பெற்றுள்ளது. இதில் பெரும் பகுதி தொகை ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டுமே சென்றுள்ளது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

மியூச்சவல் பண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ் என்பது மிகப்பெரிய நெட்வொர்க், இதில் சிறிதும், பெரிதுமாக சுமார் 2.06 லட்சம் டிஸ்டிரிபியூட்டர்கள் உள்ளனர். இதில் வெறும் 1.5 சதவீதம் அதாவது 3,158 டிஸ்டிரிபியூட்டர்ஸ் மட்டும் சுமார் 21,106 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றுள்ளனர். இது மொத்த துறையின் கமிஷன் அளவில் 77.2 சதவீதமாகும். மீதமுள்ள 22.8 சதவீத தொகையை தான் எஞ்சியுள்ள 2.03 லட்சம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் பெறுகின்றனர்.

பொதுவாக மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் தனிப்பட்ட முறையில் எவ்விதமான கமிஷனும் செலுத்துவது கிடையாது, ஆனால் இந்த கமிஷன் Expense Ratio வாயிலாக கழிக்கப்பட்டு டிஸ்டிரிபியூட்டர்களுக்கு பணம் செல்கிறது. இதில் Direct Mutual Fund திட்டங்களுக்கு கமிஷன் இருக்காது. Regular Mutual Fund திட்டங்களுக்கு மறைமுகமாக கமிஷன் செலுத்தப்படும்.

அதிக கமிஷன் பெற்ற பிரிவுகள் வாயிலாக பார்க்கும் போது வங்கி மற்றும் வங்கி தொடர்புடைய ப்ரோகரேஜ் நிறுவனங்கள் சுமார் 6330 கோடி ரூபாய் அளவிலான கமிஷனை பெற்றுள்ளது, இப்பிரிவில் மொத்தம் 50 நிறுவனங்கள் உள்ளது.

அடுத்தாக 1591 வெல்த் மேனேஜர்கள் மற்றும் கார்ப்பரேட் டிஸ்டிரிபியூட்டர்கள் இணைந்து 11,629 கோடி ரூபாய் கமிஷன்களை பெற்றுள்ளனர். 43 பின்டெக் நிறுவனங்கள் 458 கோடி ரூபாயை கமிஷனாக பெற்றுள்ளனர். 1474 தனிநபர் மியூச்சவல் பண்ட் டிஸ்டிரிபியூட்டர்கள் இணைந்து 2,689 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றுள்ளனர். சிறு மற்றும் கமிஷன் தொகையை வெளியிடாத 2.03 லடசம் டிஸ்டிரிபியூட்டர்கள் இணைந்து 6,229 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

Share This Article

English summary

Who Earns the Most from Mutual Funds? Top 1.5% Distributors Grab 77% of Rs 27,335 Crore Commissions

Who Earns the Most from Mutual Funds? Top 1.5% Distributors Grab 77% of Rs 27,335 Crore Commissions — மியூச்சுவல் பண்டுகள் மூலம் அதிகம் சம்பாதிப்பது யார்..? வெளியானது முக்கிய தகவல்!

Story first published: Friday, August 7, 2026, 16:11 [IST]

Other articles published on Aug 7, 2026

Read More

Previous Post

நல்லூர் திருவிழாவுக்குக் காளாஞ்சி கையளிப்பு!

Next Post

Exclusive | நிலவில் மோதிய எலான் மஸ்க் ராக்கெட்! பூமிக்கு பாதிப்பு? – விவரித்த மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் | World News (உலக செய்திகள்)

Next Post
Exclusive | நிலவில் மோதிய எலான் மஸ்க் ராக்கெட்! பூமிக்கு பாதிப்பு? – விவரித்த மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் | World News (உலக செய்திகள்)

Exclusive | நிலவில் மோதிய எலான் மஸ்க் ராக்கெட்! பூமிக்கு பாதிப்பு? – விவரித்த மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin