பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு எதிரான வீதி விபத்து தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைகளை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த இடைக்கால தடை உத்தரவானது இன்று (07.08.2026) பிறப்பித்துள்ளது.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வீதி விபத்து தொடர்பான வழக்கின் விசாரணைகளை முன்கொண்டு செல்வதற்கே இவ்வாறு இடைக்கால தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
ரவி செனவிரத்ன
ரவி செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த போதே, கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

