Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
செங்கல்பட்டு: முதல்வர் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த முறை இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், விவாகரத்து வழக்கு இம்முறை மீண்டும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவில், முதல்வர் விஜய் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டில், விஜய் ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை தான் கண்டுபிடித்ததாக சங்கீதா கூறி இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அந்த உறவை கைவிடுவதாக விஜய் தனக்கு உறுதியளித்த போதிலும், எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி அவர் தொடர்ந்து அந்த நடிகையுடன் பழகி வந்ததாகக் குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான போது, அவை தனக்கும் தனது பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷாவுக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக வேதனை கூறினார்.
இந்த விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்புமே நேரில் ஆஜராகவில்லை. வழக்கறிஞர் மூலமாகவே வாதிட்டனர். அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம், நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரையும் சமரச மையத்துக்குத்தான் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதேபோல் விவாகரத்தை வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த நிலையில் விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இம்முறையும் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதனிடையே இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

