• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

குப்பையில் இருந்து பணம் சம்பாதிக்கும் GOBARDhan திட்டம்.. ரூ.23700 கோடி ஒதுக்கிய மத்திய அரசு! | Centre Allocates Rs 23,731 Crore for GOBARDhan: Turning Waste into Compressed Biogas & Rural Wealth

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
குப்பையில் இருந்து பணம் சம்பாதிக்கும் GOBARDhan திட்டம்.. ரூ.23700 கோடி ஒதுக்கிய மத்திய அரசு! | Centre Allocates Rs 23,731 Crore for GOBARDhan: Turning Waste into Compressed Biogas & Rural Wealth
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குப்பையில் இருந்து பணம் சம்பாதிக்கும் GOBARDhan திட்டம்.. ரூ.23700 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் ஏரிவாயு செலவுகளை குறைக்கும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதற்காக எத்தனால் தயாரிப்பை இந்தியா முழுவதும் அதிகரிக்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டு தற்போது பெரும் வெற்றி அடைந்துள்ளது.

இதேபோல் தற்போது குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு உருவாக்க அதாவது கழிவுகளில் இருந்து பியோகேஸ் உருவாக்கும் திட்டத்திற்காக National Circular Bioenergy Scheme என்ற பெயரில் மத்திய அரசு சுமார் 23,731 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

குப்பையில் இருந்து பணம் சம்பாதிக்கும் GOBARDhan திட்டம்.. ரூ.23700 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!

இந்த மானியம் மாட்டு சானம், விவசாய கழிவு, திட கழிவுகளை பயன்படுத்தி எரிவாயு, இயற்கை உரம் தயாரிக்கும் தளத்தை அமைப்பதற்காக அளிக்கப்படுகிறது. இத்தகைய திட்டம் மூலம் ஊரக பகுதிகளில் உருவாகும் விவசாய கழிவுகள் மூலம் Compressed Biogas (CBG) உருவாக்கி அதன் மூலம் கிராமபுற மக்கள் பணம் சம்பாதிக்க முடியும். இது ஒரு Circular Economy ஆக விளங்கும்.

இந்த மானிய திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை நிர்வாகம் செய்கிறது. இந்த பயோகேஸ் திட்டத்தை 4 முறையில் பிரித்து மானியம் வழங்கப்படுகிறது..

1. வீடுகளில் அமைக்கப்படும் சிறு அமைப்பு. இதை அமைக்க 42000 ரூபாய் (Standard Unit) தேவைப்படும் நிலையில் அரசு 37000 ரூபாய் வரையில் மானியம் அளிக்கிறது. மக்கள் இதற்காக வெறும் 5000 முதலீடு செய்தால் போதுமானது

2. சமூக அமைப்பு அதாவது 10-20 வீடுகலள் இணைந்து உருவாக்கும் அமைப்பு

3. கிஸ்டர் அமைப்பு அதாவது ஒரு ஊர் அல்லது ஒரு பகுதியை சேர்ந்த மக்கள் உருவாக்கும் அமைப்பு. சமூக அமைப்பு மற்றும் கிளஸ்டர் அமைப்புகளுக்கு ஒரு மாவட்டத்திற்கு 50 லட்சம் என கட்டுப்பாடு இருந்தாலும், இத்திட்டத்தில் 150 வீடுகள் இணைந்து அமைத்தால் 7 லட்சம், 300 வீடுகள் இணைந்தால் 12 லட்சம், 500 வீடுகள் இருந்தால் 15 லட்சம், 500 வீடுகள் இருந்தால் 20 லட்சம் வரையில் சமூக அமைப்பு மற்றும் கிளஸ்டர் அமைப்புகளுக்கு மானியம் அளிக்கப்படுகிறது.

4. கமர்சியல் மாடல், இதில் தனியார் நிறுவனங்கள் பெரும் முதலீட்டில் உருவாக்கும் திட்டம். அதிகப்படியாக 10 கோடி வரையில் மானியம் வழங்கப்படுகிறது.

தற்போது மத்திய அரசு GOBARDhan திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 23700 கோடி ரூபாய் முதலீடு என்பது 2026-27 முதல் 2035-36 வரையிலான 10 வருடத்திற்கான மொத்த தொகையாகும்.

இந்தியா தனது எரிவாயு தேவையில் சுமார் 50 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே பூர்த்தி செய்து வரும் வேளையில், இத்தகைய GOBARDhan திட்ட முயற்சி மூலம் எரிவாயு பிரிவில் தன்னிறவு பெற வழிவகுக்கும்.

மத்திய அரசின் இப்புதிய நிதிஒதுக்கீடு மூலம் நாட்டில் Compressed Biogas (CBG) உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி அதிகரிக்கும் போது இயற்கை எரிவாயு உடன் உள்நாட்டில் தயாரிக்கப்படும் Compressed Biogas (CBG) கலக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்காக 2027ல் 3 சதவீத கலப்பு விகிதத்தை எட்ட டார்கெட் வைத்துள்ளது மத்திய அரசு. 2029ல் சிஎன்ஜ, பிஎன்ஜியில் சுமார் 5 சதவீத கலப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தற்போது அரது ஒரு MMBTU Compressed Biogas (CBG) விலையை 2,110 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

Share This Article

English summary

Centre Allocates Rs 23,731 Crore for GOBARDhan: Turning Waste into Compressed Biogas & Rural Wealth

Centre Allocates Rs 23,731 Crore for GOBARDhan: Turning Waste into Compressed Biogas & Rural Wealth — குப்பையில் இருந்து பணம் சம்பாதிக்கும் GOBARDhan திட்டம்.. ரூ.23700 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!

Story first published: Thursday, August 6, 2026, 18:10 [IST]

Other articles published on Aug 6, 2026

Read More

Previous Post

ஈரானுடனான போருக்கு விரைவில் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்

Next Post

மெகசின் சிறையில் பரபரப்பு – ‘E’ வார்டில் கைதிகள் அமைதியின்மை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

Next Post
மெகசின் சிறையில் பரபரப்பு – ‘E’ வார்டில் கைதிகள் அமைதியின்மை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மெகசின் சிறையில் பரபரப்பு - 'E' வார்டில் கைதிகள் அமைதியின்மை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin